Tuesday, February 26, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா

*    உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
*    உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.
*    உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
*    உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை
*    உ.வே.சாவின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
*    உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல்நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
*    உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.
*    உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.
*    உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் - சங்கராச்சாரியார்.
*    உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "என் சரிதம்" (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
*    உ.வே.சா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆற்றில் விடப்பட்ட ஒலைச்சுவடியை எடுத்து படித்து புதுப்பித்தார்.
*   குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் - கபிலர்.
*   குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று - பத்துப்பாட்டு
*   கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
*   உ.வே.சாவின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.
*   2006-ஆம் ஆண்டு உ.வே.சா. வைப் பெருமைப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை     -   8
பத்துப்பாட்டு       - 10
சீவக சிந்தாமணி   -  1
மணிமேகலை      -   1
சிலப்பதிகாரம்      -  1
புராணங்கள்        -  12
உலா -                  -   9
கோவை          -        6
தூது              -          6
வெண்பா நூல்கள்  - 13
அந்தாதி           -        3
பரணி             -         2
மும்மணிக்கோவை  - 2
இரட்டைமணிமாலை - 2
பிற பிரபந்தஸ்கள்    -   4
*   ஓரிகாமி என்பது காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை.
*   ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
*   ஜப்பானில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடகோ சசாகி.
*   சடகோ சசாகிக்கு நம்பிக்கை தந்தவர் - தோழி சிசுகோ
*   அக்குழந்தையின் நினைவிடம் உள்ள இடம்: ஹிரோசிமா நகரம்.
*   அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் - டென் லிட்டில் பிங்கர்ஸ்
*   அவள் இறக்கும் முன் 644 காகித கொக்குகள் செய்தார்.
*   டென் லிட்டில் பிங்கர்ஸ்(Ten Little Fingers) என்ற நூலை எழுதியவர்: அரவிந்த் குப்தா.
*   உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச்சுவடியை தேடி எடுத்த இடம் - கொடுமுடி(ஈரோடு மாவட்டம்)
*   "பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்"-அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் ஓலைச்சுவடி.
*   ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது -புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.இலக்கணம்:
*   நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
*   தமிழின் முதல் எழுத்து - அ
*   "அ" என்ற எழுத்தின் I என்ற கோடு குறிப்பது - பழங்கால மனிதன் முதுக்கு பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.
*   நட்பு எழுத்துக்களை மரப்பிலக்கணம் எவ்வாறு கூறுகிறது - இன எழுத்துக்கள்
*  என்பு என்பதன் பொருள் - எலும்பு
*  "ங்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - க
*  "ஞ்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - சங்க - சிங்கம், ஞ்ச - மஞ்சள், ண்ட -பண்டம், ந்த - பந்தல், ம்ப - கம்பன், ன்ற - தென்றல்.
Preparation Shows us the wayWillpower guides our steps
தயாரானால் வழிகள் உண்டாகும்தைரியமானால் படிகள் உண்டாகும்.

No comments:

Post a Comment