Tuesday, February 26, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: பாரதியார்

*   பாரதியார்
வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)
*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்
*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.
*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமிஅய்யங்கார்)
*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.
*   பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.
*  பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.
*  பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதிஉயர்நிலைப் பள்ளி(1904)
*  பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)
*  பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.
*  பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம்,பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.
*  பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில்அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
*  பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடிஉயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.பாரதியாரின் பாடல் வரிகள்:"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்""ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்""சாதி இரண்டொழிய வேறில்லை""உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"பொருள்: வண்மை - கொடை, கோணி - சாக்கு, ஞாலம் - உலகம், தமிழ்மகள் - ஔவையார், உழபடை - வேளாண்மை செய்யும் பயன்படும் கருவிகள், பறப்பு - பறக்கும் விமானம் போன்றவை.Integrate your AmbitionMultiply your AbilitiesEliminate your WeaknessAmplify Success
இலட்சியங்களை வகுத்து
தகுதிகளை பெருக்கி
குறைகளை கழித்து
வெற்றிகளை கூட்டு!

No comments:

Post a Comment