Friday, January 10, 2014
Wednesday, June 19, 2013
TETகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள்.
* வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- உற்று நோக்கல் முறை
* வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரியசிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
* வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்
* வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
* வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பதுவகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
* வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக
* லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
* ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
* ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா
* ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் - சோபி
* ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
* ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
* யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
* மோரன்ஸ்களுக்கானநுண்ணறிவு ஈவு - 50 -69
* மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
* மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
* மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
* மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக- கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
* மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
* மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
* மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
* மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
* மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
* மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
* மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
* மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
* மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
* மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
* மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
* முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
* முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
* முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
* முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல்.
* முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
* முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
* முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு - தார்ண்டைக்
* முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
* முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
* முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
* முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
* முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
* முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
* முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
* மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
* மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்குவந்த ஆண்டு - 1978
* மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3-6
* மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
* மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
* மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
* மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
* மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
* மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
* மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது - குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
* மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் - ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள்வளரும்
* மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
* மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
* மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
* மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
* மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள் - பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாச பிரயாணம்
* மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
* மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
* மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்
* மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் -குழந்தை வீடு
* மனிதனின் வளர்ச்சியையும்,நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
* மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
* மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
* மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்
* மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
* மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
* மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
* மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
* மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்பஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்றுகூறியவர் - கெம்ப்
* மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
* மனித நடத்தை பற்றிய உளவியல் கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது,கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல் - கல்வி உளவியல்
* மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
* மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன - மனவெழுச்சி நீட்சி
* மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர் - பியாஜே
* மனப்போராட்டங்களின் வகைகள் - 3
* மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
* மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம்என்றவர் - ஃபிராய்டு
* மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. - உளவியலின் அடிப்படையில் மன நலம்
* மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
* மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
* மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
* மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
* மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
* மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
* மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
* மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்
* மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
* மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
* மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
* மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
* மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள் - ஒரு கரு இரட்டையர்
* மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
* மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார?- கால்டன்.
* மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
* மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
* மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
* மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
* பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்
* பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2வயதிற்கு மேல்
* பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்
* பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
* பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்
* பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70
* பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை
* பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
* பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
* பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
* பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
* பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
* புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
* புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்
* புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்
* புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
Sunday, June 9, 2013
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் - வாழ்வியல் கணக்குகள், வடிவியல்
TNTET PAPER - I - MATHS CHAPTER - I CLICK HERE...
TNTET PAPER - I - MATHS CHAPETER - II GEOMETRY CLICK HERE...
Thursday, April 25, 2013
Thursday, April 18, 2013
Sunday, April 14, 2013
20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது, ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.முதல் தேர்வு: கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.இரண்டாவது தேர்வில் ஆறுதல்:@@இதன் காரணமாக, தேர்ச்சி, 3சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம்தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.அடுத்த தேர்வு எப்போது? எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள் நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,தேர்வு குறித்த அறிவிப்புவெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன், அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என, தெரிவித்தன.மாணவர்களுக்கு பாதிப்பு: இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேரவசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால், கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாக வெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வைமுதல் தேர்வு (ஜூலை, 2012)முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)எழுதியோர்-2,83,817தேர்ச்சி-1,735சதவீதம்-0.55இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)எழுதியோர்-3,83,666தேர்ச்சி-713சதவீதம்-0.17இரண்டாவது தேர்வு (அக்., 2012)முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)எழுதியோர்-2,78,725தேர்ச்சி பெற்றோர்-10,397சதவீதம்-3.73இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)எழுதியோர்-3,77,973தேர்ச்சி பெற்றோர்-8,849சதவீதம்-2.34Share