டி.இ.டி தமிழ் வினா - விடை: திருவருட்பா

ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திற்கான வினா - விடைகள்வாழ்த்து: திருவருட்பா
* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் -  திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூர்
* பெற்றோர் -  இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும்"உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்

Think every SecondAct every MinutePersevere every MomentEnd every day in Success

விநாடிகள் தோறும் சிந்திப்போம்!நிமிடங்கள் தோறும் செயல்படுவோம்!மணிகள் தோறும் போராடுவோம்!தினந்தோறும் வெற்றி பெறுவோம்!

டி.இ.டி தமிழ் வினா - விடை: திருக்குறள்

* இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
* திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.
* திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.
* திருக்குறள் - உலகப் பொதுமறை எனவும் முப்பால் எனவும் வாயுறைவாழ்த்து எனவும் அழைக்கப்படுகிறது.
* திருக்குறள் - அறம் + பொருள் + இன்பம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இயல்களின் எண்ணிக்கை 9.
* திருக்குறளின் 3 பிரிவுகள்: அறத்துப்பால் 38 அதிகாரங்களும், பொருட்பால் 70 அதிகாரங்களும், காமத்துப்பால் 25 அதிகாரங்களும்.
* திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* திருக்குறள் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் கொண்டது.
* திருகுறளுக்கு 10 பேர் உரையெழுதியுள்ளனர். அவற்றில் சிறந்த உரை பரிமேலழகர் எழுதிய உரை.குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டு +31 அதாவது 2012 என்பது திருவள்ளுவர் ஆண்டில் (2012+31) 2043 என்று கூறுவோம்.
* திருக்குறளின் சிறப்பு பெயர்: முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்திரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், பொருளுரை, முதுமொழி, திருவள்ளுவபயன்.
* முயற்சி திருவினை ஆக்கும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.பொருள்: வையகம் - உலகம், நண்பு - நட்பு, மறம் - வீரம், புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர், வற்றல்மரம் - வாடியமரம், என்பு - எலும்பு, ஆர்வலர் - அன்புடையர், வழக்கு - வாழ்க்கைநெறி.
If the fire is small the wind puts it outIf the fire is mighty, even the windhelps it grow.
சின்ன நெருப்பாய் திறமை இருந்தால்காற்று அதனை அணைக்கும்!காட்டு நெருப்பாய் திறமை இருந்தால்காற்றே அதனை வளர்க்கும்!

டி.இ.டி தமிழ் வினா - விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா

*    உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
*    உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.
*    உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
*    உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை
*    உ.வே.சாவின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
*    உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல்நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
*    உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.
*    உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.
*    உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் - சங்கராச்சாரியார்.
*    உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "என் சரிதம்" (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
*    உ.வே.சா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆற்றில் விடப்பட்ட ஒலைச்சுவடியை எடுத்து படித்து புதுப்பித்தார்.
*   குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் - கபிலர்.
*   குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று - பத்துப்பாட்டு
*   கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
*   உ.வே.சாவின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.
*   2006-ஆம் ஆண்டு உ.வே.சா. வைப் பெருமைப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை     -   8
பத்துப்பாட்டு       - 10
சீவக சிந்தாமணி   -  1
மணிமேகலை      -   1
சிலப்பதிகாரம்      -  1
புராணங்கள்        -  12
உலா -                  -   9
கோவை          -        6
தூது              -          6
வெண்பா நூல்கள்  - 13
அந்தாதி           -        3
பரணி             -         2
மும்மணிக்கோவை  - 2
இரட்டைமணிமாலை - 2
பிற பிரபந்தஸ்கள்    -   4
*   ஓரிகாமி என்பது காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை.
*   ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
*   ஜப்பானில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடகோ சசாகி.
*   சடகோ சசாகிக்கு நம்பிக்கை தந்தவர் - தோழி சிசுகோ
*   அக்குழந்தையின் நினைவிடம் உள்ள இடம்: ஹிரோசிமா நகரம்.
*   அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் - டென் லிட்டில் பிங்கர்ஸ்
*   அவள் இறக்கும் முன் 644 காகித கொக்குகள் செய்தார்.
*   டென் லிட்டில் பிங்கர்ஸ்(Ten Little Fingers) என்ற நூலை எழுதியவர்: அரவிந்த் குப்தா.
*   உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச்சுவடியை தேடி எடுத்த இடம் - கொடுமுடி(ஈரோடு மாவட்டம்)
*   "பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்"-அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் ஓலைச்சுவடி.
*   ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது -புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.இலக்கணம்:
*   நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
*   தமிழின் முதல் எழுத்து - அ
*   "அ" என்ற எழுத்தின் I என்ற கோடு குறிப்பது - பழங்கால மனிதன் முதுக்கு பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.
*   நட்பு எழுத்துக்களை மரப்பிலக்கணம் எவ்வாறு கூறுகிறது - இன எழுத்துக்கள்
*  என்பு என்பதன் பொருள் - எலும்பு
*  "ங்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - க
*  "ஞ்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - சங்க - சிங்கம், ஞ்ச - மஞ்சள், ண்ட -பண்டம், ந்த - பந்தல், ம்ப - கம்பன், ன்ற - தென்றல்.
Preparation Shows us the wayWillpower guides our steps
தயாரானால் வழிகள் உண்டாகும்தைரியமானால் படிகள் உண்டாகும்.

டி.இ.டி தமிழ் வினா - விடை: பாம்புகள்

*   விவசாயிகளின் நண்பன் - பாம்பு.
*   உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.
*   பாம்புப் பண்ணை அமைந்துள்ள இடம் - சென்னைக்கு அருகே கிண்டி.
*   பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன.சில பாம்புகள் குட்டிப்போடும்.
*   உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு - ராஜநாகம்(இந்தியா). இதன் நீளம் 15 அடி. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு. இவை மற்ற பாம்புகளை கூட உணவாக்கிக் கொள்ளும்.
*   பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும் - இரையைவிழுங்கும், மென்று தின்பதில்லை.
*   பாம்பு தான் பிடிக்கும் இறையை கொல்லவும், செரிமானத்திற்காகவும் தன்னுடைய எச்சில் நஞ்சு வைத்திருக்கிறது.
*   பாம்பிற்கு காது கேட்காது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செய்லபடும்.
*   52 வகையான பாம்புகளுக்கு நச்சுத்தன்மை உண்டு.
*   பாம்பைக் கொண்றால் அதன் உடல் பிளந்து வெளிவரும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்திற்கு வரவைக்கிறது.
*   சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.
*   நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின்(Cobrozin) என்ற வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
*   பாம்பின் தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் - இந்திய அரசின் வன விலங்குபாதுகாப்புச்   சட்டம் - 1972.
*  மஞ்சள் சிட்டு எந்த பகுதியில் வாழும் - சமவெளி பகுதியில்.
*  தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை - 13
*  சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.
*  தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் - 30
*  தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் - 12
*  தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் - 18
*  உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன - 216இலக்கணம்:
*   உடனிலை மெய் மயக்கம்:தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும் - க், ச், த், ப்.(எ.கா)  பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
*   வேற்றுநிலை மெய்மயக்கம்:தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் - ர், ழ்எ.கா: சார்பு, வாழ்க்கை
*   எழுத்து பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும் எழுத்துக்கள் - ற், ன்.எ.கா: குற்றம், மேற்கு -ற், அன்னம், அன்பு - ன்.
*   உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை.
*   ஆறுகள் மாசடையக் காரணம் - தொழிற்சாலைக்கழிவு.
*   மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு.
*   மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்
*   வண்மை - கொடைத்தன்மை, வன்மை - கொடுமை.

டி.இ.டி தமிழ் வினா - விடை: நாலடியார்

*   நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.
*   நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.
*   நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
*   நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.
*   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.
*   பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18
*   பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.
*   சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.
*   பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.பொருள்: அணியர் - நெருங்கி இருப்பவர், சேய் - தொலைவு, செய் - வயல், பதினெண் - பதினெட்டு.

டி.இ.டி தமிழ் வினா - விடை: பாரதியார்

*   பாரதியார்
வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)
*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்
*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.
*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமிஅய்யங்கார்)
*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.
*   பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.
*  பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.
*  பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதிஉயர்நிலைப் பள்ளி(1904)
*  பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)
*  பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.
*  பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம்,பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.
*  பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில்அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
*  பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடிஉயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.பாரதியாரின் பாடல் வரிகள்:"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்""ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்""சாதி இரண்டொழிய வேறில்லை""உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"பொருள்: வண்மை - கொடை, கோணி - சாக்கு, ஞாலம் - உலகம், தமிழ்மகள் - ஔவையார், உழபடை - வேளாண்மை செய்யும் பயன்படும் கருவிகள், பறப்பு - பறக்கும் விமானம் போன்றவை.Integrate your AmbitionMultiply your AbilitiesEliminate your WeaknessAmplify Success
இலட்சியங்களை வகுத்து
தகுதிகளை பெருக்கி
குறைகளை கழித்து
வெற்றிகளை கூட்டு!

டி.இ.டி தமிழ் வினா - விடை: நான்மணிக்கடிகை, நாட்டுப்புறப்பாட்டு

நான்மணிக்கடிகை:
*  ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.
*  கடிகை என்றால் - அணிகலன் என்று பொருள்.
*  நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன.
*  நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது எதன் பொருள் - நான்மணிக்கடிகை.
*  குடும்பத்தின் விளக்கு - பெண் என்றும், பெண்ணுக்கு விளக்கு பண்பில் சிறந்த பிள்ளைகள் மனத்திற்கினிய அன்புமிக்க பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி, என்ற கருத்து இப்பாடலில் வருகிறது.
*    பொருள்: மடவாள் - பெண், தகைசால் - பண்பில் சிறந்த, உணர்வு - நல்லெண்ணம், காதல்புதல்வர் - அன்பு மக்கள்.

நாட்டுப்புறப்பாட்டு:
*  எழுத்து வழியாக வராமல் வாய் வழியாக பரவுகின்ற பாட்டு அல்லது தாளில் எழுதாத பாடல் - நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
*  எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகள் - வாய்மொழி இலக்கியம் என்ப்படுகிறது.
*  சென்னை போன்ற பெருநகரங்களில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல் - கானா பாடல்.
*  பிறந்த குழந்தைகளுக்கு பாடுவது - தாலாட்டுப் பாடல்.
*  கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பாடுவது - விளையாட்டுப்பாடல்.
*  வேலை செய்வோர் களைப்பு நீங்க பாடுவது - தொழிற் பாடல்
*  திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்பாடுவது - சடங்கு பாடல், கொண்டாட்டப் பாடல்.
*  சாமி கும்பிடுவோர் பாடுவது - வழிப்பாட்டுப் பாடல்.
*  இறந்தோர்க்கு பாடுவது - ஒப்பாரி பாடல்.
*  பொருள்: ஆனம் - குழம்ப, அகவிலை - தானியவிலை, நாழி -தானியங்களை அளக்கும் படி.
*  அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் என்ற நூலின் ஆசிரியர் - ஜானகி மணாளன்.
*  சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
*  பழமொழியை சொலவடை என்றும் மக்கள் கூறுவர்.
*  தமிழ் சொற்கள் நான்கு வகைப்படும். அவை - பெயர், வினை, இடை, உரி.
*  சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திர நாத்
*  அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் என்ற நூலை எழுதியவர் - ஜானகி மணாளன்.
*  கூடாரம் என்பதன் பொருள் - தாங்குதல்.
*  தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும் - நான்கு. அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

டி.இ.டி தமிழ் வினா - விடை: இசையமுது, பழமொழி நானூறு

*  எழுதியவர் - பாரதிதாசன்
*  இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
*  சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
*  காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
*  படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
*  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
*  கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
*  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
*  பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.
*  யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் - பாரதியார் மீது கொண்ட காதலால்*
*  பொருள்: பொடி - மகரந்தப்பொடி, வானப்புனல் - வானத்துநீர்(மழை நீர்), தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையாதவெப்பம், தழைக்கவும் - குறையவும்.

பழமொழி நானூறு:
*  ஆசிரியர் - முன்றுறை அரையனார், முன்றுறை - ஊர்ப்பெயர், அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்.
*   பழமொழியில் உள்ள பாடல்கள் - 400*
*  பொருள்:ஆற்றுணா வேண்டுவது இல் -"கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.

ஜவர்கர்லால் நேரு:
*  நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
*  நேருவின் துணைவியார் பெயர் - கமலா
*  தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
*  நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
*  பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
*  நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. நேரு விரும்பி படித்தது - ஆங்கிலநூல்கள்.
*  போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
*  அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
*  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
*  இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
*  தழை என்பதன் பொருள் - செடிகொடி.*
* குறிப்பு:*  சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
*  மில்டன் - ஆங்கில கவிஞர்.
*  பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
*  காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
*  டால்ஸ்டாய் - இரஸ்ய நாட்டு எழுத்தாளர்(போரும் அமைதியும்நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
*  பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
*  பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
*  கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
*  நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.*
* குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.இலக்கணம்:
*  ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது.எ.கா: கண கண, சல சல, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள.
*  சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடுமலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.
*  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -கடுவெளிச் சித்தர்.*
* பொருள்:*  சித்து - அறிவு
*  கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
*  நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.*
* பொருள்:
*  வேம்பு - கசப்பான சொற்கள்.
*  வீறாப்பு - இருமாப்பு, கடம் - உடம்பு. சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
*  கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
*  இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
*  புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
*  தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி

டி.இ.டி தமிழ் வினா - விடை: பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

பெரியார்:
*  இயற்பெயர்: இராமசாமி்.
*  பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
*  பிறந்த ஊர்: ஈரோடு.
*  தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன.
*  போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
*  தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை.
*  பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
*  சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
*  மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
*  பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தா - 13,12,000 கி.மீ
*  பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணிநேரம் உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.

புறநானூறு:
*  புறநானூறு = புறம் + நான்கு + நூறு.*  தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
*  இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
*  அதியமானின் நண்பர் - ஔவையார்.
*  சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
*  நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
*  ஔவை என்பதன் பொருள் - தாய்.பாடல் வரிகள்:எவ்வழி நல்லவர் ஆடவர்அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்
*  பொருள்: அவல் - பள்ளம், மிசை - மேடு, நல்லை - நன்றாகஇருப்பாய்.
*  திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
*  காலம்: 26.02.1947 - 13.05.2000
*  பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.
*  பாடல்வரிகள் சில: "கடலின் நான் ஒரு முத்து"எத்தனை உயரம் இமயமலை- அதில்இன்னொரு சிகரம் உனதுதலை"பூமிப்பந்து என்ன விலை? -உன்புகழைத் தந்து வாங்கும் விலை

!பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்:
*  பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.
*  பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார். இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான் பிள்ளை.
கல்வி:
*  தொடக்கக்கல்வி - கமுதியில் கிருஸ்தவ பாதிரியார்களிடம் - பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவர்றை கற்றறிந்தார்.
*  முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.
*  முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார்.
*  நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
*  சமபந்தி முறையை ஆதரித்தார்.
*  தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார்.
*  தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)
*  தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.
*  சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.
*  1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
*  தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது.
*  முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார்.
*  17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.
*  உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள்.
*  உம்பர் என்றால் மேலே என்று பொருள்.
*  உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார்.
*  கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1.
*  இவரின் கூற்றுகள்:
*  சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவதுபெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும்இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை.
*  வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.
*  மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார்.
*  மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்)
*  இலக்கணம்: சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ,இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது இல்லை)எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.
*  அகச்சுட்டு - அவன், இவன்
*  புறச்சுட்டு - அப்பையன்
*  சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.
*  தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆஎ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?
*  வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்?  யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?
*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏஎ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.
*  தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.
பொருள்:*  ஈரம்- அன்பு, அனைஇ-கலந்து, படிநு-வஞ்சம், அகன்-உள்ளம்,அமர்-விருப்பம், செம்பொருள்-சிறந்த பொருள், துவ்வாமை-வறுமை, அல்லவை-பாவம், நன்றி-நன்மை, சிறுமை-துன்பம், ஈன்றல்-தருதல், வனகொல்-கடுஞ்சொல், கவர்தல்-நுகர்தல்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
*  செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
*  பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
*  காலம்: 13.04.1930 - 08.10.1959
*  மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
*  தனது பாடல்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.
*  சில பாடல் வரிகள்:செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்திறமைதான் நமது செல்வம்"பயிரை வளர்த்தால் பலனாகும் - அதுஉயிரைக் காக்கும் உணவாகும்""காயும் ஒரு நாள் கனியாகும் -நம்கனவும் ஒரு நாள் நனவாகும்"